I Grow
ஏழு நாட்களில் உலகை படைத்தானாம்! உலகின் பிரம்மாண்டத்தை பார்க்கும்போது இந்த கூற்றை நம்ப முடியவில்லை. அதை அற்புதம் என்கிறார்கள் சிலர்.
பாற்கடலில் பள்ளிக்கொண்ட வண்ணம் உலகை இயக்குகிறானாம். பால்வீதீயை NASA படம்பிடித்தபோது அதை அற்புதம் என்றார்கள் சிலர்.
காலத்தின் வரலாற்றை அறிய முனைந்தவரோ, படைத்தவன் எவனுமில்லை படைப்பு மட்டுமே அற்புதம் என்றார்.
எது எப்படியோ, நேற்று வரை இல்லாமல் இன்று என் வீட்டு முற்றத்தில் இதழ் விரிய புன்னகைக்கும் இந்த மலர்கள் நிச்சயம் அற்புதமே!
சிலருக்கு படைத்தவன் அற்புதமென்றால் மற்றவருக்கோ படைப்புகள் அற்புதம். பார்வைகள் வேறாயினும் அனுபவம் ஒன்றே.
- Brindha Vivek
Each and every word of yours is Arpudham❤
ReplyDelete